/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மக்களுக்கு இடையூறு: இருவர் மீது வழக்குமக்களுக்கு இடையூறு: இருவர் மீது வழக்கு
மக்களுக்கு இடையூறு: இருவர் மீது வழக்கு
மக்களுக்கு இடையூறு: இருவர் மீது வழக்கு
மக்களுக்கு இடையூறு: இருவர் மீது வழக்கு
ADDED : ஜன 08, 2024 05:40 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விருத்தாம்பிகை நகரை சேர்ந்த தர்மராஜ், சூர்யா, 23, ஆகிய இருவரும், கையில் உருட்டு கட்டை வைத்துகொண்டு சாலையில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தி, ஆபாசமாக திட்டினர்.
இது குறித்து விருத்தாசலம் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.