/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு ... துவக்கம்; மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம் சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு ... துவக்கம்; மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு ... துவக்கம்; மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு ... துவக்கம்; மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு ... துவக்கம்; மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 10, 2025 08:00 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு, அதிகளவில் நேரடி நெல் விதைப்பு செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் சம்பா பருவம் ஆக., செப்., மாதங்களில் துவங்கி டிச., ஜன., மாதங்களில் முடிவடைகிறது. இந்த பருவத்தில் காவிரி கடைமடை பகுதிகளான சிதம்பரம், கிள்ளை, புதுச்சத்திரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 2 லட்சம் ஏக்கர் அளவிற்கு ஆ ண்டுதோறும் சம்பா சாகுபடிக்கு, நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.
இந்த பருவத்தில் 120 முதல் 130 நாட்கள் கொண்ட சன்ன ரகமான நெல் வகைகள் பயிரிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாற்றங்கால் தயார் செய்து, நாற்று விட்டு 40 நாட்கள் கழித்து நடவு செய்து வந்தனர்.
ஆனால், நடவு செய்வதால் விவசாய கூலியாட்கள் செலவு அதிகம் பிடிக்கிறது. இதனால் செலவை குறைக்கும் வகையில், ஏராளமான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதைத் தொடர்ந்து காவிரி கடைமடை பகுதிகளில், நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு மேட்டூரில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. இதனால், விவசாயத்திற்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கும் என்பதால், காவிரி கடைமடை விவசாயிகள் சம்பா பருவத்திற்கு விதைப்பு செய்ய தயாராகினர்.
குறிப்பாக, நிலங்களை புழுதி உழவு செய்து, இயற்கை உரங்களான கால்நடை கழிவுகளை தெளித்தும், வரப்புகளே மராமத்து செய்தும், விதைப்புக்கு நிலத்தை தயார் செய்தனர். அதற்கேற்றாற் போல அண்மையில் பெய்த மழை விதைப்புக்கு ஏற்ற ஈரப்பதத்தை கொண்டுள்ளது .
அதை பயன்படுத்தி விதைப்பு செய்யும் விவசாயிகள் நிலத்தில் ஈரம் உலர்வதற்குள் விதைப்பு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக, சம்பா பருவத்திற்கு ஏற்ற சன்னரகமான பி.பி.டி., பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை நேரடி விதிப்பு செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்யும் பரப்பளவு காவிரி டெல்டா பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் அதிக லாபம் தரும் தோட்டக்கலை பயிர்களை செய்து வந்தனர். தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை, பருவம் தவறிய மழை ஆகியவற்றால் எந்த பயிரிலும் அதிகளவு லாபம் கிடைப்பதில்லை.
அதற்கு மாற்றாக நெற்பயிர் மட்டுமே மற்ற பயிர்களை விட பரவாயில்லை என விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதனால்தான் ஆண்டுதோறும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தாண்டும் வழக்கம்போல் நேரடி நெல் விதைப்பு கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.