/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி நடுவீரப்பட்டு பள்ளி மாணவர்கள் ஆர்வம் 'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி நடுவீரப்பட்டு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி நடுவீரப்பட்டு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி நடுவீரப்பட்டு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
'தினமலர்- பட்டம்' வினாடி வினா போட்டி நடுவீரப்பட்டு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜன 08, 2025 05:50 AM

நடுவீரப்பட்டு : 'தினமலர் -பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமும் இணைந்து நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து, 'பதில் சொல், பரிசை வெல்' என்ற, வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடுவீரப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில், தேர்வு செய்யப்பட்ட 16 மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், டாக்பியா மாநில இணைசெயலாளர் சேகர், பா.ஜ., கடலுார் தென்மேற்கு ஒன்றிய தலைவர் நடுவை பரதன், சேலம் மல்லிகாராம் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் மாணவிகள் கவுஷிகா, கோபிகா ஆகியோர் தலைமையிலான குழு முதலிடத்தையும், வினில், ஹரிஹரன் தலைமையிலான குழு இரண்டாம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.