Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீபுத்துார் கிராம ஊராட்சியில் துணை தலைவர் அதிகாரம் பறிப்பு

ஸ்ரீபுத்துார் கிராம ஊராட்சியில் துணை தலைவர் அதிகாரம் பறிப்பு

ஸ்ரீபுத்துார் கிராம ஊராட்சியில் துணை தலைவர் அதிகாரம் பறிப்பு

ஸ்ரீபுத்துார் கிராம ஊராட்சியில் துணை தலைவர் அதிகாரம் பறிப்பு

ADDED : ஜன 03, 2024 06:48 AM


Google News
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீபுத்துார் ஊராட்சியில், துணைத் தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீபுத்தூர் ஊராட்சியின் தலைவராக கலைவாணியும், துணைத் தலைவராக உத்தமராசா உள்ளார். இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஊராட்சி நிதியை பயன்படுத்த முடியாததால், வளர்ச்சி பணிகள் தடைப்பட்டது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கலைவாணி, கிராம வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி துணைத் தலைவரை மாற்ற கலெக்டர் அருண் தம்புராஜிடம் கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து, கலெக்டரின் ஆலோசனைப்படி, நேற்று ஸ்ரீபுத்துார் ஊராட்சியில் தலைவர் கலைவாணி தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், துணைத் தலைவர் உத்தமராசா ஊராட்சி காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிப்பது குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதில், வார்டு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் தலைவர் கலைவாணி ஆகிய 7 பேர் கையொப்பமிட்டதால், துணைத் தலைவவருக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஊராட்சி 6வது வார்டு உறுப்பினர் பூங்கோதைக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் வழங்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊராட்சி துணை தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்ட சம்பவத்தால் ஸ்ரீபுத்துார் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us