/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 8 ம் தேதி பேச்சுப்போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 8 ம் தேதி பேச்சுப்போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 8 ம் தேதி பேச்சுப்போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 8 ம் தேதி பேச்சுப்போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 8 ம் தேதி பேச்சுப்போட்டி
ADDED : ஜூலை 03, 2025 01:23 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு வரும் 8 ம் தேதி கடலுாரில் பேச்சு போட்டி நடக்கிறது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி 2025ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தொடர்பில் கடலுார் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 8 ம் தேதி அன்று கடலுார், மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியர் கல்வி (ம)பயிற்சி நிறுவனத்தில் பள்ளி, கல்லுாரி பேச்சுப்போட்டிகள் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசாக 2ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளன.]
பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லுாரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லுாரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 07.07.2025 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எனவே, இப்போட்டிகளில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.