/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேரோட்டத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்ததில் பலி தேரோட்டத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்ததில் பலி
தேரோட்டத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்ததில் பலி
தேரோட்டத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்ததில் பலி
தேரோட்டத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்ததில் பலி
ADDED : ஜூன் 08, 2025 02:52 AM

கடலுார்:கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, சிறிய தேரில் சுவாமி வீதியுலா நடந்தது.
அப்போது தேரின் கலசம், மேலே தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியது. இதில், தேரை இழுத்து வந்த புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த கர்ணாசந்திரன், 40, என்பவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் நான்கு பேர் காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ரெட்டிச்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.