ADDED : செப் 23, 2025 07:42 AM
வடலுார் : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்.
வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகுரு மனைவி சோனியா, 24; இவர், தனது தந்தை வீட்டுக்கு செல்வதாக, பாலகுருவிடம் கூறிச் சென்றார். வெகு நேரமாகியும் சோனியா மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சோனியாவின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.