Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரோடு ரோலர் மோதியதில் பெற்றோர் கண்ணெதிரே மகள் பலி

ரோடு ரோலர் மோதியதில் பெற்றோர் கண்ணெதிரே மகள் பலி

ரோடு ரோலர் மோதியதில் பெற்றோர் கண்ணெதிரே மகள் பலி

ரோடு ரோலர் மோதியதில் பெற்றோர் கண்ணெதிரே மகள் பலி

ADDED : ஜன 22, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரோடு ரோலர் மோதியதில் தந்தை கண்ணெதிரே மகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு கீழாங்காடு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மோகன்,45; கார்பெண்டர்; இவரது மனைவி கஸ்துாரி,37; இவரது மகள்கள் சந்தியா,16; சரண்யா,14;

நேற்று காலை மோகன் சேத்தியாத்தோப்பிலிருந்து பண்ருட்டி சின்னபேட்டையில் நடைபெறும் உறவினர் வளையலணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் பைக்கில் வந்தார்.

பண்ருட்டி வி.கே.டி., சாலை பனிக்கன்குப்பம் ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த என்.எல்.02.கியூ 7647 ரோடு ரோலர் நின்றிருந்த சந்தியா மீது மோதியதில் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி இறந்தார்.

மோகன், கஸ்துாரி, சரண்யா ஆகிய 3 பேரும் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ரோடு ரோலர் டிரைவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் அலாம்மகன் காசிம் அலாம், 21; போலீசார் கைது செய்தனர்.

பெற்றோர் கண்ணெதிரே மகள் பலியான சம்பவம் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us