/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆபத்தான குடிநீர் 'டேங்க்' நடுவீரப்பட்டில் மக்கள் அச்சம்ஆபத்தான குடிநீர் 'டேங்க்' நடுவீரப்பட்டில் மக்கள் அச்சம்
ஆபத்தான குடிநீர் 'டேங்க்' நடுவீரப்பட்டில் மக்கள் அச்சம்
ஆபத்தான குடிநீர் 'டேங்க்' நடுவீரப்பட்டில் மக்கள் அச்சம்
ஆபத்தான குடிநீர் 'டேங்க்' நடுவீரப்பட்டில் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் நீர்தேக்க தொட்டியால் மக்கள் அச்சமடைந்தள்ளனர்.பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இங்கிருந்து, பழையபாளையம், மீனாட்சிபேட்டை தெரு, செட்டியார் தெரு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் கடந்த 2012ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.தற்போது தொட்டியின் உட்புறம் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் செரித்து, இரும்பு துகள்கள் தண்ணீருடன் கலந்து வருகிறது. நீர்தேக்க தொட்டியை தாங்கும் துாண்களும் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.இதனால், அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்பு, மேல்நிலைநீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.