/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 11, 2025 11:21 PM
வேப்பூர்: வேப்பூரில் ஊர் வழிகாட்டி பெயர் பலகையில் ஸ்டிக்கர்கள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
சென்னை-திருச்சி, கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது.
இதன் வழியே, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்துார், சேலம், பெரம்பலுார், திருச்சி, கடலுார், சிதம்பரம் பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால், தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இங்கு, கடலுார்-சேலம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வழியை தெரிந்து கொள்ளும் விதமாக, விருத்தாசலம்-சேலம் மார்க்க சாலையின் இருபுறங்களிலும், ஊர் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. கடந்தாண்டு சாலை விரிவாக்கத்தின் போது, சேலம் மார்க்கத்தில் இருந்த பலகை அகற்றப்பட்டது.
தொடர் பராமரிப்பு பணி இல்லாததால், விருத்தாசலம் மார்க்கத்தில் உள்ள வழிகாட்டி பெயர் பலகையில் ஸ்டிக்கர் சேதமடைந்துள்ளது. இதனால், புதியதாக வரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் வழி தெரியாமல் அவதியடைகின்றனர்.
இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.