Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சைபர் கிரைம் விழிப்புணர்வு

சைபர் கிரைம் விழிப்புணர்வு

சைபர் கிரைம் விழிப்புணர்வு

சைபர் கிரைம் விழிப்புணர்வு

ADDED : அக் 16, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், ஆன்லைன் மோசடிகள், மொபைல் போன் மூலம் தவறான தகவல்கள் பரப்புவது மற்றும் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வங்கி கணக்கின், ஒ.டி.பி., மற்றும் பின் நம்பர் மற்றவர்களுக்கு பகிரக்கூடாது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூக வலைதளங்களில் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் வீடியோ கால்கள் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

சைபர் குற்றங்களால் பணம் இழந்தால், தாமதமின்றி உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ அழைக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us