/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு
ADDED : மே 29, 2025 03:37 AM

கடலுார்: மசூலிப்பட்டினத்தில் நடக்க உள்ள 12வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கு கடலுார் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12வது பீச் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி மசூலிப்பட்டினத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழக அணியில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சபிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடலுார் அடுத்த ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்த மாணவி சபிதா, தற்போது காஞ்சிபுரம் சங்கரா பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படிக்கிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் எக்ஸலன்ஸில், பயிற்சியாளர் நதியாவின் மேற்பார்வையில் பயிற்சி பெறுகிறார். இவர் அண்மையில் பீகாரில் நடந்த கேலோ இந்தியா இளையோர் போட்டியில் தமிழக கபடி அணியில் இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றவர்.