/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை கடலுார் கோர்ட்டில் தீர்ப்புதொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
ADDED : ஜன 31, 2024 07:34 AM

கடலுார் : தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்,55; பண்ருட்டியில் உள்ள மளிகை 'ஹோல் சேல்' கடையில் வேலை செய்து வந்தார்.
இவர், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பணம் வசூலிக்க சென்றவர், வடலுார் பஸ் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், சண்முகத்துடன் வேலை செய்து வந்த பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த சதாம் உசேன்,35; என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் சதாம் உசேன், தனது கடன் பிரச்னையை தீர்க்க தனது நண்பர்களுடன் சேர்ந்து சண்முகத்தை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அவர் வசூலித்து வைத்திருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சதாம் உசேன், அவரது நண்பர்கள் வடலுார், கல்லுக்குழி கோபாலகிருஷ்ணன் மகன் வினோத்குமார், 27; பண்ருட்டி, ஆண்டிக்குப்பம் நாகப்பன் மகன் அஜித், 28; ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் சதாம் உசேனுக்கு ரூ.8,000, மற்ற இருவருக்கும் தலா ரூ.7.000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.