/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கலை கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம் அரசு கலை கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு கலை கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு கலை கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு கலை கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
ADDED : மே 30, 2025 05:58 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 2ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2025-26ம் கல்வியாண்டின் சிறப்பு பிரிவிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 2ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. இதில் விளையாட்டு, தேசிய மாணவர் படை, மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவம் உட்பட சிறப்பு பிரிவில் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் சான்றிதழ்களுடன் வருகை தர வேண்டும்.
4ம் தேதி பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், வணிகவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவம் மற்றும் இதர ஆவணங்கள் அசல் மற்றும் மூன்று நகல்கள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.