/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலி அடையாள அட்டை 'உலா' மாநகராட்சி கமிஷனர் 'செக்' போலி அடையாள அட்டை 'உலா' மாநகராட்சி கமிஷனர் 'செக்'
போலி அடையாள அட்டை 'உலா' மாநகராட்சி கமிஷனர் 'செக்'
போலி அடையாள அட்டை 'உலா' மாநகராட்சி கமிஷனர் 'செக்'
போலி அடையாள அட்டை 'உலா' மாநகராட்சி கமிஷனர் 'செக்'
ADDED : செப் 03, 2025 07:13 AM
க டலுார் மாநகராட்சியில், பணியாற்றும் ஊழியர்கள் கமிஷனரின் கையெழுத்திட்ட அடையாள அட்டைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அவரது அனுமதியின்றி கையெழுத்தை ஸ்கேன் செய்து பலருக்கு அடையாள அட்டை வழங்கி இருப்பதை அண்மையில் மாநகராட்சி கமிஷனர் கண்டுபிடித்தார்.
ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர் கமிஷனரின் கையெழுத்தை பயன்படுத்தி அடையாள அட்டை தயாரித்து வழங்கி இருப்பது தெரியவந்தது. இதுபோன்ற போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சிலர் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று 'சரக்கு' ஏற்றிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வரும்போது செக்போஸ்ட்டில் போலீஸ் இடைமறித்து கேட்டால் அடையாள அட்டையை காண்பித்து தப்பி வருவதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க கமிஷனர், போலீசில் புகார் அளித்துள்ளார். போலி அடையாள அட்டைகளை வழங்கியது யார், எங்கு தயாரிக்கப்பட்டது, யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.