ADDED : ஜூன் 16, 2025 01:05 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சாத்தப்பாடி கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி., க்கு நிலம் கொடுத்து பாதித்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
வெங்கடேசன் தலைமை தாங்கினார். சண்முகம், பாதிக்கப்பட்டோர் நலச்சங்க தலைவர் கலியமூர்த்தி, தெய்வசிகாமணி, அரசவேல், வெள்ளையன், செல்லத்துரை, தாமோதரன், பன்னீர்செல்வம், ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் பேசினார்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கருணை தொகையை என்.எல்.சி., நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்களை திரட்டி நில எடுப்பு அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.