/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்... தொடர்கிறது: மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவைபஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்... தொடர்கிறது: மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்... தொடர்கிறது: மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்... தொடர்கிறது: மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்... தொடர்கிறது: மாணவர்களிடம் விழிப்புணர்வு தேவை
UPDATED : ஜூலை 05, 2025 07:28 AM
ADDED : ஜூலை 05, 2025 03:28 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மாணவர்கள் கூட்டம் மிகுதியால் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
மக்கள் தொகையில் மாணவர்கள் 20 சதவீதமாக உள்ளனர். நாம் எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த உலகை மாற்றக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் மாணவர்கள். அரசு ஏழை மாணவர்களுக்காக இலவச பஸ் பாஸ், சிற்றுண்டி, மதிய உணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளி, ஐ.டி.ஐ., அரசு கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. 2024--25ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், 2 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாசை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர். கடலுார் மாவட்டத்தில், அரசு பஸ்கள் அடிக்கடி இல்லாத காரணத்தாலும், நண்பர்களோடு பயணிப்பதற்காகவும், அரசு பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர்.
அதுவும் மாணவர்களாக இருப்பதால் பஸ்சில் படிக்கட்டை விட்டு உள்ளே செல்வதில்லை. கால் வைக்க இடமில்லாத இடத்திலும், கைப்பிடி இல்லாத இடத்திலும் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான முறைகளில் தொங்கிக்கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.
ஓட்டுநர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் கூட மாணவர்கள் அதை ஏற்காமல் சாகசம் என்று கருதி, படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குகின்றனர். அரசு பஸ் செல்லாத இடங்களிலும் தனியார் பஸ்களில் மாணவர்களின் படிக்கட்டுப் பயணம் பற்றி சொல்லவே வேண்டாம்.
படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மாணவர்களுக்கு சிரமங்களை உண்டாக்கி மன உளைச்சலில் தள்ளக்கூடாது என்கிற நோக்கத்தில் போலீசார் தண்டிக்க தயங்குகின்றனர்.
அதையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துக்களினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் மாணவர்கள் நலன் கருதி பஸ்களில் ஏறி, இறங்கும் வழிகளில் கதவுகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாணவர்களாக பார்த்து திருந்தினால்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.