/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
ADDED : மார் 21, 2025 06:34 AM
வேப்பூர் : வேப்பூர் அருகே அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, வகுப்பறை பற்றாக்குறை உள்ளதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, புதிய வகுப்பறைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் கட்டுமானப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது.
கடலூர் தி.மு.க., இளைஞரணி மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் நாராயணசாமி துவக்கி வைத்தார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் முருகேசன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் காமராஜ், கருப்பையா, ஊர் முக்கியஸ்தர் அய்யாவு, வி.சி., ஒன்றிய நிர்வாகி மணிகண்டன், தி.மு.க., இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் சூர்யா, குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.