/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
ADDED : மே 21, 2025 11:37 PM

கடலுார்: கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டியில் தமிழக வாலிபால் அணியில் பங்கேற்ற கடலுார் மாணவி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
கடலுார் செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் சிவபாலகுமார் மகள் கிரேஷ்மா,16. இவர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பில் பயிற்சி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
பீகாரில் நடந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டியில், தமிழக வாலிபால் அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
அதில் தமிழக அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று தங்கம் வென்று சாதனை படைத்தது. தங்கம் வென்ற மாணவி கிரேஷ்மாவை, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர், மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.