கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : மார் 22, 2025 08:39 PM

புவனகிரி, : கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வமணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மருத்துவ அலுவலர் பவித்ரா மணிகண்டராஜன் விழாவை துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் உணவு முறைகள் பற்றி பேசினார். விழாவில், மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முஸ்லிம் பெண்களுக்கும் வளைகாப்பு நடந்தது.