/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 23ல் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு 23ல் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு
23ல் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு
23ல் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு
23ல் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 21, 2025 06:58 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் வரும் 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும். கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின் பற்றி, பொதுவான இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும். இடம், நேரம் குறித்து முன்னரே பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து தனி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
கூட்டத்தில, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.