ADDED : செப் 11, 2025 03:29 AM
திட்டக்குடி:திட்டக்குடி அருகே மின்னல் தாக்கியதில், தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 5:00 மணியளவில், சூறைகாற்று, இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது.
திட்டக்குடி அடுத்த நெய்வாசல் வீரமுத்து, 62, என்பவர் வீட்டின் பின்புறம் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி, தீப்பற்றி எரிந்தது. மரத்தின் உச்சியில் இருந்த காய்ந்த ஓலைகள் எரிந்து கீழே விழுந்தன.
அக்கம் பக்கத்தில் வீடுகள், வைக்கோல் போர்கள் இருந்ததால், பொது மக்கள் பதட்டமடைந்து, தீயை அணைத்தனர்.