Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மணிமுக்தாற்றில் துப்புரவு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

மணிமுக்தாற்றில் துப்புரவு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

மணிமுக்தாற்றில் துப்புரவு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

மணிமுக்தாற்றில் துப்புரவு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

ADDED : பிப் 11, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மணிமுக்தாற்றில் நடந்த துாய்மைப்பணியை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா, வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

முக்கிய நிகழ்வாக, 24ம் தேதி மாசிமக உற்சவத்தில், லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஐதீக நிகழ்வு நடக்கிறது.

இதற்காக, ஆற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தி, முட்செடிகள், சம்பு, கோரை புற்களை அகற்றும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நடக்கிறது.

இதனை, அமைச்சர் கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகர்மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், கவுன்சிலர்கள் கருணாநிதி, மணிவண்ணன், பாண்டியன், அன்பழகன், ஜெயலட்சுமி நம்பிராஜன், கரிமுணிஷா பொன்கணேஷ், முத்துக்குமரன், அறிவழகி, வசந்தி, அருள்மணி, துப்புரவு அலுவலர் பூபதி, இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், மாணவரணி சதீஷ்குமார் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us