/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாமி ஊர்வலத்தில் மோதல் கடலுார் அருகே பரபரப்புசாமி ஊர்வலத்தில் மோதல் கடலுார் அருகே பரபரப்பு
சாமி ஊர்வலத்தில் மோதல் கடலுார் அருகே பரபரப்பு
சாமி ஊர்வலத்தில் மோதல் கடலுார் அருகே பரபரப்பு
சாமி ஊர்வலத்தில் மோதல் கடலுார் அருகே பரபரப்பு
ADDED : பிப் 25, 2024 05:02 AM
கடலுார் : கடலுார் அருகே மாசிமக சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த பில்லாலி தொட்டி காலனி பகுதியில் இருந்து மாரியம்மன் சாமி அலங்கரித்து, தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர். திருவந்திபுரம் சாலக்கரை அருகே சாமி வந்தபோது, ஊர்வலத்தில் வந்தவர்கள் மேள தாளங்கள் வாசித்து நடனம் ஆடியுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.