Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா

ADDED : ஜூன் 21, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் முதுநகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் மார்க்கெட் பணிகள் தரமில்லாமல் உள்ளதாக குற்றம்சாட்டி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் முதுநகரில் உள்ள பழமையான பக்தவச்சலம் மார்க்கெட்டில் இருந்த கடைகள் பழுதடைந்ததால், அவற்றை இடித்துவிட்டு புதிய மார்க்கெட் கட்டும் பணி கடந்த 2023ம் ஆண்டு துவங்கியது. நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 60 லட்சம் ரூநாய் மதிப்பில் மார்க்கெட் கட்டும் பணி நடக்கிறது.

கட்டுமானப் பணிகள் தரமானதாக இல்லை என்றும், ஏற்கனவே அறிவித்தது போல போதிய அளவு கடைகளை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி கவுன்சிலர்கள் அ.தி.மு.க., பரணிதரன், பா.ம.க., சரவணன், வி.சி., கவுன்சிலர் ராஜலட்சுமி கணவர் சங்கரதாஸ் ஆகியோர் நேற்று காலை 10:00 மணிக்கு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us