காந்தி மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா
காந்தி மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா
காந்தி மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : ஜன 01, 2024 05:45 AM
சிதம்பரம் : சிதம்பரம் காந்தி மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. காந்தி மன்ற பொருளாளர் சிவராமசேது தலைமை வகித்தார். மன்ற செயலாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். மன்றத் தலைவர் ஞானம் வரவேற்றார்.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பு குறித்து சிதம்பரம் பாவநாசர் ஆலய சபைகுரு செல்லத்துரை சிறப்புரை ஆற்றினார். மன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் நடனசபாபதி, சுந்தர்ராஜன், லக்குமணன், கலியபெருமாள், வனஜா தில்லைநாயகம், தமிழரசி சேகர் உள்ளிட்டோர் பேசினர்.மன்ற உறுப்பினர் டாக்டர் சந்திரமவுலி நன்றி கூறினார்.