ADDED : மே 20, 2025 06:34 AM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் சந்துரு, 24; இவரும், திட்டக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணத்திற்கு இருதரப்பினர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் சந்துருவும், சிறுமியும் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் திட்டக்குடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, சந்துருவை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.