/உள்ளூர் செய்திகள்/கடலூர்/'மக்களுடன் முதல்வர்' முகாம் நிறைவு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு'மக்களுடன் முதல்வர்' முகாம் நிறைவு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் நிறைவு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் நிறைவு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் நிறைவு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜன 05, 2024 06:26 AM

கடலுார் : கடலுார் முதுநகரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
கடலுார் முதுநகரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது துறை அதிகாரிகள் பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
கடலுார் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நிறைவு பெற்றதையொட்டி, பல்வேறு துறை அலுவலர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நினைவு பரிசு வழங்கினார்.
மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ், தாசில்தார் விஜய்ஆனந்த், மாநகர நகர் நல அலுவலர் எழில்மதினா, இன்ஜினியர் கலைவாணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், பாரூக் அலி, கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், கர்ணன், மகேஸ்வரி விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு முதல், 45 வார்டு வரையிலான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.