/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: கடலூரில் கலெக்டர் ஆய்வுமுதல்வர் திட்ட சிறப்பு முகாம்: கடலூரில் கலெக்டர் ஆய்வு
முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: கடலூரில் கலெக்டர் ஆய்வு
முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: கடலூரில் கலெக்டர் ஆய்வு
முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: கடலூரில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 03, 2024 12:40 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை, கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கடலுார் மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், கடந்த 19ம் தேதி துவங்கியது. இதுவரையில், 32 வார்டுகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று 33வது வார்டு முதல் 36 வது வார்டு வரையிலான மக்கள் குறைகளை மனுக்களாக பெற்றனர்.
திருப்பாதிரிபுலியூரில் தனியார் மண்டபத்தில் நடந்த முகாமில், மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று துவக்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ் முகாமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில்மதனா, கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.