/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி
ADDED : ஜூன் 19, 2025 05:42 AM

சிதம்பரம் : மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடலுார் ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகடமியில் நடைபெற்ற, 8 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான, குழந்தைகள் மற்றும் திறந்த சதுரங்க போட்டியில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 9-ஆம் வகுப்பு மாணவி அஸ்விதா பங்கேற்றார்.
இப்போட்டியில் மாவட்ட அளவில் நான்காம் இடம் பிடித்து, மாணவி அஸ்விதா வெற்றி பெற்றார். வெள்ளி பதக்கம் பெற்ற மாணவியை வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் வீனஸ் குமார், பள்ளி முதல்வர் நரேந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாரட்டினர்.