Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

ADDED : மே 14, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி நகர அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நகர அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 215 மாணவர்களில் 214 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.99 ஆகும். மாணவி அபிராமி 600க்கு 594 மதிப்பெண் பெற்று சிதம்பரம் நகரில் சிறப்பிடம் பிடித்தார். பள்ளி அளவில் கிருத்திகா 584, வித்யாலட்சுமி 582 மதிப்பெண் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.

23 மாணவர்கள் 100க்கு100 மதிப்பெண் பெற்றனர். 575க்கு மேல் 30 பேர், 550க்கு மேல் 40 பேர், 500க்கு மேல் 30 பேர் மதிப்பெண் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவி அபிராமிக்கு பள்ளி தாளாளர் வீனஸ் குமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை 10,000 ஆயிரம் வழங்கினார்.

பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி, துணை முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us