/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மஞ்சக்கொல்லை அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டிக்கான பயிற்சி மஞ்சக்கொல்லை அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டிக்கான பயிற்சி
மஞ்சக்கொல்லை அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டிக்கான பயிற்சி
மஞ்சக்கொல்லை அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டிக்கான பயிற்சி
மஞ்சக்கொல்லை அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டிக்கான பயிற்சி
ADDED : ஜூலை 03, 2025 02:56 AM

புவனகிரி: புவனகிரி வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, மஞ்சக்கொல்லை மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
தமிழக அரசு ஆணையின் படி மாணவர்களை அதிகளவில் விளையாட்டில் பங்கேற்க வைக்கும் நோக்கில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். புவனகிரி வட்டார அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி வரும் நிலையில், சதுரங்கப்பட்போட்டியில் பங்கேற்க உள்ள நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலை என மூன்று நிலைகளில் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சியை மஞ்சக்கொல்லை மேல் நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது.
இதில் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். பயிற்சியை துவக்கி வைத்து தலைமை ஆசிரியர் ரவி, விளையாட்டில் பங்கேற்று வெற்றி பெறுவதால், மத்திய, மாநில அரசுகளில் போட்டித்தேர்வு உள்ளிட்ட வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, மாணவர்கள் உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார். உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட குழுவினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.