/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மத்திய தொழிற்சங்கங்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் மத்திய தொழிற்சங்கங்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கங்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கங்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கங்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 11:24 PM

கடலுார்: கடலுார் ஜவான்பவன் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யூ.,மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் திருமாவளவன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் குளோப், ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், பாஸ்கரன், பாலு, ரவிச்சந்திரன், தமிழ்மணி, சாவித்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.