/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாய்க்காலில் கவிழ்ந்து மாட்டு வண்டி விபத்து வாய்க்காலில் கவிழ்ந்து மாட்டு வண்டி விபத்து
வாய்க்காலில் கவிழ்ந்து மாட்டு வண்டி விபத்து
வாய்க்காலில் கவிழ்ந்து மாட்டு வண்டி விபத்து
வாய்க்காலில் கவிழ்ந்து மாட்டு வண்டி விபத்து
ADDED : ஜூன் 18, 2025 05:05 AM
புதுச்சத்திரம்: டீசல் இன்ஜின் ஏற்றி வந்த மாட்டு வண்டி, வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சத்திரம் அடுத்த பெரிய குமட்டியை சேர்ந்தவர் செல்லப்பன்,53; இவர், பெரியக்குமட்டி பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில், டீசல் என்ஜினை வைத்து தண்ணீர் இறைத்து, விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று டீசல் இன்ஜினை வீட்டிற்கு எடுத்துச் செல்ல, மாட்டு வண்டியில் ஏற்றி ஓட்டிச் சென்றார். அப்போது, அங்குள்ள வடிகால் வாய்க்கால் பாலத்தில் கட்டப்பட்டுள்ள, பக்கவாட்டு கட்டையில் ஏறி இறங்கும் போது, மாட்டு வண்டி நிலை தடுமாறி வாய்க்காலின் உள்ளே, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், செல்லப்பன் லேசான காயங்களுடன் தப்பினார்.
இணைப்பு பாலம் கட்டும் போது, வாய்க்காலின் கரையை விட, அதிக உயரமாக பக்கவாட்டு கட்டை கட்டியதால் தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.