மா.கம்யூ., சார்பில் பிரசார நடைபயணம்
மா.கம்யூ., சார்பில் பிரசார நடைபயணம்
மா.கம்யூ., சார்பில் பிரசார நடைபயணம்
ADDED : ஜூன் 13, 2025 03:36 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகர மா.கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்க நடைபயணம் நடந்தது.
ஸ்டீபன்ராஜ் தலைமை தாங்கினார். வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் நடைபயணத்தை துவக்கி வைத்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு வரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
நெல்லிக்குப்பம் பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஈ.ஐ.டி.,பாரி ஆலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாநில செயற்குழு கண்ணன், மாவட்ட செயற்குழு வாஞ்சிநாதன், ஜெயபாண்டியன், சுப்ரமணியன், தர்மேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.