/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார் தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்
தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்
தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்
தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்
ADDED : மார் 25, 2025 07:03 AM
புவனகிரி : புவனகிரி அருகே தம்பி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அண்ணன் புகார் செய்துள்ளார்.
புவனகிரி அடுத்த சாத்தப்பாடி இந்திரா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்செல்வன்,17; இவர், நேற்று முன்தினம், அதே ஊரில் தெற்கு தெருவில் உள்ள பாட்டி பழனியம்மாள் வீட்டில் தங்கி இருந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்த அருள்செல்வனின் அண்ணன் சிவா, தன் தம்பி நண்பர்களுடன் வெளியில் சென்ற போது ஏற்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.