ADDED : மார் 26, 2025 05:06 AM

கடலுார் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடலுார் செம்மண்டலம் - கம்மியம்பேட்டை இடையே கெடிலம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.
இதன் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலம் முறையான பராமரிப்பின்றி, பாலத்தின் பக்கவாட்டு தடுப்புக்கட்டையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு பாலம் பலமிழந்து காணப்படுகிறது.
பெஞ்சல் புயல் பாதிப்பின் போது, தென்பெண்ணையாறு, கெடிலம் உள்ளிட்ட ஆறுகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்றதால் பாலம் மேலும் வலுவிழந்தது. அதன்பின் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புக்கட்டைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.
ஆனால், துவங்கிய நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது. எனவே, பணிகளை மீண்டும் துவங்கி பாலத்தை சீரமைத்து அச்சமின்றி வாகனஓட்டிகள் அவ்வழியே செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.