/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்கள் வருகை குறைவால் பூதங்குடி அரசுப் பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் வருகை குறைவால் பூதங்குடி அரசுப் பள்ளிக்கு பூட்டு
மாணவர்கள் வருகை குறைவால் பூதங்குடி அரசுப் பள்ளிக்கு பூட்டு
மாணவர்கள் வருகை குறைவால் பூதங்குடி அரசுப் பள்ளிக்கு பூட்டு
மாணவர்கள் வருகை குறைவால் பூதங்குடி அரசுப் பள்ளிக்கு பூட்டு
ADDED : ஜூன் 11, 2025 07:49 PM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதியம் 2.00 மணியோடு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு பள்ளியை பூட்டிவிட்டு ஆசிரியை செல்லமுயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் இன இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர்.
பள்ளியில் தலைமை ஆசிரியர் இன்று விடுப்பு எடுத்துள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர் மட்டும் நேற்று இருந்துள்ள நிலையில் மாணவர்களில் வருகை குறைவாக இருந்துள்ளது.
மேலும் நேற்று மதியம் உணவு இடைவேலை முடிந்து மாலை 2.00 மணியளவில் ஐந்து மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்ததால் ,அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆசிரியை பள்ளியை பூட்டி வீட்டு செல்ல முயன்றுள்ளார்.
தகவலறிந்த பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளிக்கு வந்ததை அறிந்த ஆசிரியை பள்ளியை மீண்டும் திறந்து மாணவர்களை அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.