/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நுால் வெளியீட்டு விழா: எம்.பி., பங்கேற்பு நுால் வெளியீட்டு விழா: எம்.பி., பங்கேற்பு
நுால் வெளியீட்டு விழா: எம்.பி., பங்கேற்பு
நுால் வெளியீட்டு விழா: எம்.பி., பங்கேற்பு
நுால் வெளியீட்டு விழா: எம்.பி., பங்கேற்பு
ADDED : செப் 21, 2025 11:29 PM

சிதம்பரம்: சிதம்பரத்தில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் புல முதல்வர் பாரி தலைமை தாங்கினார். டாக்டர் முத்துக்குமரன், வீனஸ் பள்ளி குழும நிறுவனர் குமார் முன்னிலை வகித்தனர். மதுமிதா வரவேற்றார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. , பங்கேற்று, நகராட்சி சேர்மன் செந்தில்குமார் எழுதிய 'மீண்டும் ஒரு காதல் கடிதம்' என்ற நுாலை வெளியிட்டு பேசினார்.
நுரையீரல் டாக்டர் கலைக்கோவன், மூசா வாழ்த்திப் பேசினர். விழாவில், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்புசந்திரசேகரன், மணிகண்டன், துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
சேர்மன் செந்தில்குமார் நன்றி கூறினார்.