/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிலை கடத்தல் தடுப்பு எஸ்.பி.,க்கு பா.ஜ., ஆன்மிக பிரிவு வாழ்த்து சிலை கடத்தல் தடுப்பு எஸ்.பி.,க்கு பா.ஜ., ஆன்மிக பிரிவு வாழ்த்து
சிலை கடத்தல் தடுப்பு எஸ்.பி.,க்கு பா.ஜ., ஆன்மிக பிரிவு வாழ்த்து
சிலை கடத்தல் தடுப்பு எஸ்.பி.,க்கு பா.ஜ., ஆன்மிக பிரிவு வாழ்த்து
சிலை கடத்தல் தடுப்பு எஸ்.பி.,க்கு பா.ஜ., ஆன்மிக பிரிவு வாழ்த்து
ADDED : மே 12, 2025 12:14 AM

கடலுார்: நெதர்லாந்தில் உள்ள கண்ணப்ப நாயனார் சிலையை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,க்கு பா.ஜ.,நிர்வாகி வாழ்த்து தெரிவித்தார்.
நாகப்பட்டினம் அடுத்த திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோவிலைச் சேர்ந்த கண்ணப்ப நாயனார் சிலை, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 64 செ.மீ.,உயரம், 23கிலோ எடை கொண்ட அந்த சிலை கடந்த 2010ம் ஆண்டு திருடுபோனது.
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், நெதர்லாந்தில் ஏலத்தில் விற்கப்பட உள்ளது தெரிந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் ஏலத்தை நிறுத்தி, சிலையை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக எஸ்.பி.,சிவக்குமாரை, தமிழக பா.ஜ.,ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.