ADDED : ஜன 14, 2024 03:48 AM
புவனகிரி, : புவனகிரி அருகே வடக்குத்திட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பல்வேறு கோரிக்கை கள் குறித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ., விடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
நிர்வாகிகள் சோமசுந்தரம், திருமூர்த்தி, சண்முகம், சந்தோஷ் அரவிந்தன், அன்பரசு, ராஜாராமன், ராஜேந்திரன், ஞானசபாபதி, பாலசுப்ரமணியன், சண்முகம் பங்கேற்றனர்.


