/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.பி., மீது நடவடிக்கை பா.ஜ., புகார் எம்.பி., மீது நடவடிக்கை பா.ஜ., புகார்
எம்.பி., மீது நடவடிக்கை பா.ஜ., புகார்
எம்.பி., மீது நடவடிக்கை பா.ஜ., புகார்
எம்.பி., மீது நடவடிக்கை பா.ஜ., புகார்
ADDED : ஜூலை 03, 2025 11:27 PM

கடலுார்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை இழிவாக பேசிய தி.மு.க., எம்.பி.,ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன், கடலுார் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தார்.
மனு விபரம்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய நீலகிரி தொகுதி தி.மு.க., எம்.பி.,ராஜா மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். அமித்ஷா வை அடிக்கடி தரக்குறைவாகவும், தவறாகவும் பேசுவதையும் ராஜா வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.