/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 04, 2024 04:09 AM

கடலுார்: தமிழ்நாடு நாயுடு குலத்தோர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் டவுன் ஹாலில் நடந்த விழாவிற்கு, மாநில தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராஜன், பொருளாளர் சந்திரபாபு, துணைத் தலைவர் விஷ்ணுகுமார், கவுரவத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். கடலுார் ஜி.ஆர்.கே., குழும உரிமையாளரும், சங்க மாநில உயர்மட்டக்குழு தலைவருமான துரைராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்ச வழக்கறிஞர் இளையகட்டபொம்மன், பொன்னேரி சரத் சிறப்புரையாற்றினர்.
இதில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், கடலுாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை வைப்பது. நாயுடு சமுதாய ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. வருங்காலங்களில் அரசியலில் ஈடுபடும் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, மாநில உயர்மட்டக்குழு துணைத் தலைவர் லட்சுமிபதி, செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அர்த்தநாதீஸ்வரர், கடலுார் மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகானந்தம், ரமேஷ், ஆழ்வார் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், திருவேங்கடம், குருநாத், முகேஷ், இளைஞரணி திவாகர், பிரேம், வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.