Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காங்., முன்னாள் மாநில தலைவர் பிறந்தநாள் விழா

காங்., முன்னாள் மாநில தலைவர் பிறந்தநாள் விழா

காங்., முன்னாள் மாநில தலைவர் பிறந்தநாள் விழா

காங்., முன்னாள் மாநில தலைவர் பிறந்தநாள் விழா

ADDED : அக் 24, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: முன்னாள் மாநில காங்., கமிட்டி தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

தமிழ்நாடு தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், தமிழ்நாடு காங்., கமிட்டி முன்னாள் தலைவர் அழகிரி பிறந்தநாள் விழா, ஓட்டுச்சீட்டு முறைகேட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் மற்றும் சனாதன எதிர்ப்பு என்பது இந்துத்துவா, எதிர்ப்பா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் தில்லை. மக்கீன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி. ராதா, முன்னிலை வகித்தனர். விருதாச்சலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

முன்னாள் காங்., கமிட்டி தலைவர் அழகிரி பேசும் போது,'' ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., மட்டும்தான் இந்துக்களுக்கு ஆரவாக இருப்பதாக பொய் பிம்பத்தை ஏற்படுத்தி, மற்றவர்கள் எல்லாம் எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே இந்துகள் பா.ஜ., ஆதரிக்க வேண்டும் என பரப்புரை செய்கின்றனர்'' என்று பேசினார்.

தொடர்ந்து, பிறந்த நாளுக்கான கேக்கை, அழகிரி வெட்டி, கட்சியினருக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ., ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவரகள், ராஜா, சம்பத்குமார், நகர துணை தலைவர் சின்ராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சங்கர், நகர செயல் தலைவர் குமார், பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், விவசாய பிரிவு தலைவர் இளங்கீரன், பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி ரங்கநாதன், இளைஞர் காங்கிரஸ் அன்பரசன், கடலூர் மாநகர தலைவர் வேலுசாமி, கடலூர் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார், காமராஜ், ராஜேஷ், சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us