/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருச்சியில் மாயமான பைக் 6 ஆண்டுக்கு பின் மீட்பு திருச்சியில் மாயமான பைக் 6 ஆண்டுக்கு பின் மீட்பு
திருச்சியில் மாயமான பைக் 6 ஆண்டுக்கு பின் மீட்பு
திருச்சியில் மாயமான பைக் 6 ஆண்டுக்கு பின் மீட்பு
திருச்சியில் மாயமான பைக் 6 ஆண்டுக்கு பின் மீட்பு
ADDED : மார் 25, 2025 09:37 PM

பெண்ணாடம் : திருச்சியில் காணாமல் போன வழக்கறிஞரின் பைக் 6 ஆண்டுகளுக்கு பின் வாகன சோதனையில் பெண்ணாடம் போலீசார் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான நேற்று முன்தினம் இரவு பெரியகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தியபோது, அதில் வந்தவர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச்சென்றார்.
போலீசார், பைக்கை பறிமுதல் செய்து விசாரித்தபோது, திருச்சி மாநகர செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலைய சரகத்தில் வசிக்கும் வழக்கறிஞர் சந்தோஷ்குமார், என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்தபோது 6 ஆண்டுகளுக்கு முன் பைக் திருடுபோனதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இதையடுத்து, திருச்சி மாநகர் செசன்ஸ் கோர்ட் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் முன்னிலையில், பைக்கை உரிமையாளர் சந்தோஷ்குமாரிடம் நேற்று காலை பெண்ணாடம் போலீசார் ஒப்படைத்தனர்.