/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.17 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை ரூ.17 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
ரூ.17 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
ரூ.17 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
ரூ.17 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : அக் 20, 2025 09:39 PM

விருத்தாசலம்: விளாங்காட்டூர் ஊராட்சியில் ரூ. 17 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் ஊராட்சி, கீரம்பூர் கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரேஷன் கடை கட்டடம் மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கலையரங்கம் கட்டும் பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் ஒன்றிய பொறியாளர் செல்வகுமார், காங்., மாவட்ட பொதுச் செயலாளர் துரைசாமி, வட்டார தலைவர்கள் சாந்தகுமார், முருகானந்தம், சரவணன், நெடுமாறன், லெனின் பங்கேற்றனர்.


