/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வங்கிக் கடன் திட்டம்: கலெக்டர் வெளியீடுவங்கிக் கடன் திட்டம்: கலெக்டர் வெளியீடு
வங்கிக் கடன் திட்டம்: கலெக்டர் வெளியீடு
வங்கிக் கடன் திட்டம்: கலெக்டர் வெளியீடு
வங்கிக் கடன் திட்டம்: கலெக்டர் வெளியீடு
ADDED : ஜன 06, 2024 06:27 AM

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வழங்கக்கூடிய கடன் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தில் மாவட்டத்திற்கான 2024--25 நிதியாண்டில் 20287.82 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.
கடலுாரில் நடந்த வங்கியாளர்கள் கூட்டத்தில் நபார்டு தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பாலமுருகன், தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார், நபார்டு மேலாளர் சித்தார்த்தன், முதன்மை மேலாளர் அசோக் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், 'அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் தகுந்த பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கடனுதவியை விரைந்து வழங்க வேண்டும்.
பண்ணை இயந்திரமயமாக்கல், நுண்ணீர் பாசன முறைகள், கால்நடை வளர்ப்புத் துறை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதால், விவசாயத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்களை நோக்கி அதிக இலக்குகளை ஒதுக்க வேண்டும்.
விவசாய துறைக்கான மதிப்பீடு 15,505.71 கோடி ரூபாயும், எம்.எஸ்.எம்.இ.,க்கு 2,559.75 கோடி ரூபாயும் மற்றும் மற்ற முன்னுரிமைத் துறைக்கு 2,222.35 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.