ADDED : பிப் 25, 2024 05:31 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அகஸ்தியம் பவுண்டேஷன் தலைவர் ஈஸ்வர் ராஜலிங்கம், மாவட்ட சேர்மன் திருமாறன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
விழாவில், மாவட்ட அவை தலைவர் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவ சிங்காரவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணியன், கனகராஜன், இளங்கோவன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், ஊராட்சி தலைவர்கள் சிவசங்கரி மகேஷ், செல்லப்பன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஹாஜா நஜிமுதீன், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பாலமுருகன், மகேந்திரன், பாஸ்கர், உசேன், ஹக் உட்பட பலர் பங்கேற்றனர்.