/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விழிப்புணர்வு குறும் படம் ;காவல் துறை வெளியீடு விழிப்புணர்வு குறும் படம் ;காவல் துறை வெளியீடு
விழிப்புணர்வு குறும் படம் ;காவல் துறை வெளியீடு
விழிப்புணர்வு குறும் படம் ;காவல் துறை வெளியீடு
விழிப்புணர்வு குறும் படம் ;காவல் துறை வெளியீடு
ADDED : ஜன 13, 2024 04:03 AM

கடலுார் : கடலுாரில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் குறும்படத்தை வெளியிட்டனர்.
கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், 'அறிவியல் கண்டுபிடிப்பை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சிறந்த படைப்பாக குறும்படம் உள்ளது' என்றார்.
விழாவில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஏ.டி.எஸ்.பி.,க் கள் அசோக்குமார், ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அரவிந்தன், ஏ.எஸ்.பி., ரகுபதி, ஏ.எஸ்.பி., (பயிற்சி) ரவிந்திர குமார் குப்தா, டி.எஸ்.பி.,க்கள் பிரபு, சவுமியா, இன்ஸ்பெக்டர்கள் தீபா, தாரகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.