ADDED : பிப் 25, 2024 05:20 AM

கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலுக்கு சிறந்த கட்டடத்திற்கான விருது வழங்கப்பட்டது.
இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் ஆகியன சார்பில், கான்கிரீட் தின விழா புதுச்சேரியில் நடந்தது.
விழாவில், சிறந்த கட்டடத்திற்கான அல்ட்ராடெக் விருது கடலுார் வி ஸ்கொயர் மாலுக்கு அதன் உரிமையாளர்கள் அனிதா ரமேஷ், லட்சண மால்யா, சரவணன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.